ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவக்கம்
திருச்செங்கோடு, நவ.27: திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ரூ.3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. இங்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தய ட்ராக், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம், கபடி மைதானம், லாங் ஜம்ப், கோ-கோ போட்டிக்கான இடம், பார்வையாளர் அமர்ந்து பார்வையிட 100 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட பார்வையாளர் மாடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ஈஸ்வரன், எம்பி மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, பிஆர்டி நிறுவனங்களின் மேலாண் இயக்குனர் பரந்தாமன், ஆர்டிஓ லெனின் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தனர். இந்த விளையாட்டு மைதானத்தில், 3 ஏக்கரில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது. அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர செயலாளர்கள் நடேசன், கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, தாசில்தார் கிருஷ்ண