மாஜி எஸ்ஐயை கடித்து குதறிய தெருநாய்
ராசிபுரம், ஆக.27:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பில் ராஜ்(60). இவர் எஸ்ஐயாக பணியாற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அன்பில் ராஜ் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று வழக்கம் போல், ராசிபுரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து முத்துகாளிப்பட்டி வரை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கோரைக்காடு அருகே ெசன்ற போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அவரை கடித்து குதறியது. இதையடுத்து, அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement