தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அர்த்தநாரீஸ்வரர் தேர் கட்டுமான பணி தீவிரம்

திருச்செங்கோடு, நவ.25: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இந்த சாமிகள் திருமலையில் இருந்து நகருக்கு இறங்கி வந்து தேரின் மீது அமர்ந்து வரும் தேர்த்திருவிழா, திருச்செங்கோட்டில் வைகாசி விசாகப் பெருவிழாவாக கோலாகாலமாக கொண்டாடப்படும். அர்த்தநாரீஸ்வரர் தேர் சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, மைசூர் மகாராஜாவால் செய்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2.17 கோடியில் அர்த்தநாரீஸ்வரருக்கு புதிய தேர் செய்ய அரசு அனுமதி அளித்தது. தேருக்கான நிதி பக்தர்களிடம் நன்கொடையாக பெறப்பட்டது.

Advertisement

புதிய தேர் செய்யும் பணி, கடந்த 12.7.2024 அன்று தொடங்கப்பட்டது. புதிய தேர் 100 டன் எடையில் அமைகிறது. தேர் செய்ய தேக்கு, இலுப்பை, வேங்கை ஆகிய மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய தேரை திருவாரூர் ஸ்தபதி இளவரசன் 20 பேர் கொண்ட தனது குழுவினருடன் நிர்மாணித்து வருகிறார். புதிய தேர் செய்யும் பணிகள் ஏறத்தாழ 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தெய்வங்கள் அமரும் தேவாசனம், சிம்மாசனம் செய்யும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டவுடன், பக்தர்கள் காணும் வகையில், பழைய தேர் காட்சிப் பொருளாக வைக்கப்படும். கலைநயம் மிக்க துணிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், புதிய தேர் கட்டுமானப் பணிகளை, ஈஸ்வரன் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், சித்ரா வண்ணக்கண்ணன், அர்த்தநாரி, பச்சியப்பன், கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் கொமதேக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement

Related News