மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவிகள் சாதனை
பரமத்திவேலூர், அக்.24: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள மணியனூர் கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளியில், கொங்கு சஹோதயா பள்ளி கூட்டமைப்பு (சிபிஎஸ்இ) சார்பில் வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 12 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசிலா ராஜேந்திரன், துணை செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜூ, முதல்வர் டாக்டர் ஆரோக்கியராஜ், இயக்குநர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.