ரூ.3.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மல்லசமுத்திரம், அக்.23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு மங்களம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மேல்முகம், கொளங்கொண்டை, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 132 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி மூட்டை ரூ.6,269 முதல் ரூ.7,840 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி மூட்டை ரூ.4,329 முதல் ரூ.4,519 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள், ரூ.3.53 லட்சத்திற்கு விற்பனையானது எனவும், அடுத்த ஏலம் வருகிற 29ம்தேதி நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.