ஒன்றிய அளவிலான வானவில் மன்ற போட்டி
நாமக்கல், நவ.22: நாமக்கல்லில் ஒன்றிய அளவிலான வானவில் மன்ற போட்டி நேற்று நடைபெற்றது. இதில், அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் 50 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசி ராணி தொடங்கி வைத்தார். உலகளாவிய பிரச்சனைகளுக்கு உள்ளூர் அளவில் தீர்வு காணுதல் என்ற தலைப்பின் கீழ், மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை பயன்படுத்தி எவ்வாறு அது அறிவியல் அணுகு முறையில் தீர்வு காணலாம் என மாதிரிகள் மற்றும் செயல்திட்டம் மூலம் விளக்கினார்கள். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
Advertisement
Advertisement