கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
திருச்செங்கோடு, நவ.22: திருச்செங்கோடு வட்டாரம், கருமாபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் மூலம், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு ரபி பருவ பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பட்டுவளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் கௌசல்யா, பட்டுவளர்ச்சி துறை மானியத்திட்டங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மல்பெரி சாகுபடி பற்றிக்கூறினார். மேலாண்மை முகமை திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும், பிஎம் கிசான் திட்டத்தை பற்றியும், விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்வது பற்றியும் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும், மானிய திட்டங்கள் பற்றியும் கூறினார். உதவித் தொழில்நுட்ப மேலாளர் அஜித், உழவன் செயலி, அதன் பயன்பாடுகள் குறித்து கூறினார். பயிற்சியில் முன்னோடி விவசாயி ஜெகநாதன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.