கீழே தவறி விழுந்து தொழிலாளி பலி
நாமக்கல், ஆக.22: மோகனூர் அருகேயுள்ள கே.புதுப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மங்காடு பிந்தானி (23) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று தனது மனைவியுடன் நாமக்கல் சென்று விட்டு அணியாபுரம் வந்தனர். அங்கிருந்து தோளூரில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக, இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளனர். தோளூர் அருகில் ஆட்டோவில் இருந்து இறங்கியபோது, கீழே விழுந்த மங்காடு பிந்தானி தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கோழிப்பண்ணை மேலாளர் விக்னேஷ்(29) அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement