மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
ராசிபுரம், நவ.21: ராசிபுரம் ஒன்றிய பகுதியில், மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, திமுக குடும்ப நல நிதியை மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வழங்கினர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, கலைஞர் குடும்ப நல நிதியை ராஜேஸ்குமார் எம்பி வழங்கி வருகிறார். தற்போது, ராசிபுரம் ஒன்றியத்தில் மறைந்த 47 உறுப்பினர்கள், பட்டணம் பேரூரில் 11 உறுப்பினர்கள், பிள்ளாநல்லூர் பேரூரில் 25 உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதியை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலையில், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பேரூர் செயலாளர்கள் நல்லதம்பி, சுப்ரமணியம், சார்பு அணி நிர்வாகிகள் சத்யசீலன், சர்தார், சித்தார்த், கிருபாகரன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் பாலு, கண்ணன், முகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.