ஆடு திருடிய 4பேர் கைது
சேந்தமங்கலம், ஆக. 21: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி ராசாக்கவுண்டன் புதூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவரது மனைவி ராணி (45). இவருக்கு சொந்தமான ஆடுகள் தோட்டத்தின் அருகில் உள்ள நைனாமலை வனப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு ஓடி ெசன்று ராணி, பார்த்தபோது 4பேர் 2 டூவீலரில் ஆடுகளை திருடிக் கொண்டு சென்றனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆடுகளை திருடி சென்ற 4பேரையும் மடக்கி பிடித்து, சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (55), சேந்தமங்கலம் குறவர் காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்த பெரியசாமி (36), சின்ராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து 2டூவீலர்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.