சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், ஆக.21: நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 28ம் தேதி மாலை 3.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement