சிஐடியு தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.20: மின் வாரிய அலுவலகம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, நேற்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பான சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முருகேசன், துணை செயலாளர் கண்ணன், கிளை பொருளாளர் அழகேசன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தில், மின் பகிர்மானங்களை தனியாருக்கு தாரைவார்த்து, மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Advertisement
Advertisement