அனுமதியின்றி கற்களை வெட்டிய 2 டிராக்டர், இயந்திரம் பறிமுதல்
ராசிபுரம், நவ.19: ராசிபுரம் அருகேயுள்ள சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் மாயகண்ணன். இவரது தோட்டத்தில் அனுமதியின்றி வெடி வைத்து, பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கற்களை வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் 2 டிராக்டர் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி கற்களை வெட்டியதால் போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement