மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் திமுக முப்பெரும் விழாவில் 500 பேர் பங்கேற்பு
பரமத்திவேலூர், செப்.19: கரூர் கோடங்கிப்பட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆணைப்படியும், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி அறிவுறுத்தலின் படியும் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் தலைமையில் இளைஞர்கள், கட்சி பொறுப்பாளர்கள், சார்பு அணியினர், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக பரமத்திவேலூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், மாவட்ட ஓட்டுனரணி துணை அமைப்பாளர் உதயகுமார், அவைத்தலைவர் மதியழகன், பேரூர் இளைஞரணி தினேஷ்குமார், பேரூர் மாணவரணி தமிழ்ச்செல்வன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.