அரசு பஸ்- லாரி மோதல்
நாமக்கல், ஆக.19:நாமக்கல்லை அடுத்த கருங்கல்பாளையம் தேசிய நெடுங்சாலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த அரசு பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்டர் மீடியன் அருகில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஜங்களாபுரத்தை சேர்ந்த பரமசிவம் (28) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து நல்லிபாளையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அரசு பேருந்தில் வந்தவர்கள் யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.