சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.19: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை தொழிலாளர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சிங்காரவேலு, மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் செங்கோடன், ஜெயக்கொடி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.