மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டை, நவ. 18: நாமகிரிப்பேட்டை எடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை, பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளை செயலாளர் குப்பண்ணன் தலைமை வகித்தார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சபாபதி ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர். கழிப்பறையை தூய்மை செய்து தண்ணீர் வசதி செய்து கொடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். நித்தியா நன்றி கூறினார்.
Advertisement
Advertisement