சேதமடைந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
Advertisement
நாமகிரிப்பேட்டை, அக்.18: வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் வழியாக மல்லூர் செல்லும் சாலையில், வடுகம்பாளையம் பகுதியில் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின் கம்பத்தின் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் டூவீலர், கார்களில் செல்கின்றனர். தவிர, கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றாமல், இரும்பு கம்பிகளால் ஒட்டி வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன்பாக சேதமடைந்த மின்கம்பம் அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement