எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Advertisement
நாமக்கல், அக்.18: நாமக்கல்லில் மாநகர அதிமுக சார்பில், அதிமுகவின் 54வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் சந்தைபேட்டை புதூரில் உள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு, மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement