புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சேந்தமங்கலம், செப்.17: புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுச்சத்திரம் காவல் நிலையம் சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் நோய் தாக்குதல் அதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர். இப்பேரணியானது கல்லூரியில் இருந்து தொடங்கி பாச்சல் சாலை, நாமக்கல் சாலை, கடைவீதி வழியாக புதுச்சத்திரம் காவல் நிலையம் வரை சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.