தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

பள்ளிபாளையம், அக்.16: பள்ளிபாளையத்தில் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளை வைத்திருந்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில்

Advertisement

அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் முனியப்பா நகர் முத்து மாரியம்மன் கோயில் பகுதியில் சில வாலிபர்கள் அடிக்கடி சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ., இளஞ்சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்ேபாது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். இதில் ஒருவரிடம் 400 கிராம் கஞ்சா பொட்டலங்களும், இன்னொவனிடம் 70 போதை மாத்திரைகளும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் டிவிஎஸ் மேட்டை சேர்ந்த லட்சுமணன்(21), முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார்(25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதிக்கு வரும் இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement