மூவர்ண கொடி அணிவகுப்பு
மல்லசமுத்திரம், ஆக.15: நாடு முழுவதும் இன்று, 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. விடுதலைக்காக சுதந்திர போரில் உயிர்நீத்த தலைவர்களை போற்றும் வகையில், பாஜ சார்பில் நேற்று மல்லசமுத்திரத்தில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி, மூவர்ணகொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டையில் தொடங்கி பி.டி.ஓ.,அலுவலகம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரணி முடிந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டார். ஒன்றிய தலைவர் வெங்கட்ராஜா, மாவட்ட செயலாளர் கோகுல்நாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.