சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைப்பு
திருச்செங்கோடு, அக். 14: வாகன போக்குவரத்திற்கு அவசியமான நெடுஞ்சாலைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தாலும், வாகன போக்குவரத்து மற்றும் கால நிலைகளுக்கு ஏற்ப தார் சாலையானது சேதாரமடைந்து பள்ளங்கள் ஏற்படும். குறிப்பாக மழையால் பள்ளங்கள், குழிகள் உருவாகும். அவ்வாறு உருவாகும் பள்ளங்களை கண்டறிந்து பருவமழை காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சரி செய்வது வழக்கம். பள்ளிபாளையம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பாக, திருச்செங்கோடு -கொக்கராயன்பேட்டை சாலையில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. திருச்செங்கோடு மக்கள் ஈரோடு செல்ல பள்ளிபாளையம் சாலையை பயன்படுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைப்பது அவசியமாகிறது. இப்பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement