குடியிருப்புக்கு அருகில் மயானம் அமைக்க எதிர்ப்பு
நாமக்கல், அக்.14: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஈஸ்வரமூர்த்தி பாளையம் வடக்குகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அளித்த கோரிக்கை புகார் மனு விபரம்: வடக்குகாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பை சுற்றி விவசாய நிலம் மற்றும் தார்சாலை உள்ளது. குடியிருக்கும் பகுதியில் மற்றொரு சமுதாயத்திற்கு மயானம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி அளிப்பதன் மூலம், இரு சமுதாய மக்கள் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement