ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல், செப்.14: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2025-26ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2025-26 கரும்பு அரவை பருவத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 4 மாதங்கள் கடந்த பின்னும், இதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, விவசாயிகள் நலன் கருதி, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலைக்கான அரசு உத்தரவை பிறப்பித்து, கெஜட்டில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement