திமுக இளைஞரணி மண்டல ஆலோசனைக் கூட்டம்
திருச்செங்கோடு, செப்.14:திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மண்டல இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, கிழக்கு மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத், ஈரோடு நிர்வாகிகள் திருவேங்கடம், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளைஞரணி பாக முகவர்கள் பட்டியல், கிளை செயலாளர்கள் பட்டியல் ஆகியவற்றை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும், வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற பணியாற்றும் வழிவகைகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
Advertisement
Advertisement