ட்ரெய்லர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மனு
நாமக்கல், செப்.14: நாமக்கல் ட்ரெய்லர் உரிமையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் எம்பி மாதேஸ்வரனை, ட்ரெய்லர் உரிமையாளர் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஆனந்தன், துணை தலைவர் செல்வகுமார், இணை செயலாளர்கள் பரமசிவம், விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் ட்ரெய்லர் உரிமையாளர்களின் சிரமங்களை தெரிவித்தனர். பெல் டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் விரைவில் வருகிறது. இதில் உள்ள இடர்பாடுகளை போக்குவதற்கு, மத்திய தொழில் துறை அமைச்சரிடம், நிர்வாகிகளை அழைத்துச் சென்று எடுத்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாதேஸ்வரன் எம்பி, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசி, நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் உறுதியளித்தார்.