கிராம வேளாண்மை முன்னேற்றக்குழு பயிற்சி
மல்லசமுத்திரம், டிச.12: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம், கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு, முஞ்சனூர் கிராமத்தில் ராபி பருவ பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் நடந்தது. வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள் குறித்து உதவி இயக்குனர் யுவராஜ் விளக்கம் அளித்தார். மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் பெற கடைபிடிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், குறித்து விரிவாக கூறினார். பயிர் துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், காப்பீட்டு திட்டம், உயிர் உரம் மற்றும் நுண்ணூட்டங்களின் முக்கியத்துவம், பயன்படுத்தும் முறைகள் பற்றியும் உதவி வேளாண்மை அலுவலர் மோகன் விளக்கமளித்தார். உழவன் செயலியின் முக்கியத்துவம், தமிழ் மண்வளம், அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றியும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மோகன் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.