படைவீடு பேரூராட்சியில் 40 குடும்பங்களுக்கு வீட்டு மனை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம், செப்.12: படைவீடு பேரூராட்சி பகுதியில் நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிபாளையம் ஒன்றியம், படைவீடு பேரூராட்சியில் வசிக்கும் 40 குடும்பங்களை சேர்ந்த நிலமற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடத்தை நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டார். ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனை வழங்கினார். இடத்திற்கான அளவீடுகளை தயார் செய்து, அதற்கான ஆவணங்களை பயனாளிகளுக்கு வழங்கும் வகையில், தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், படைவீடு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement