37,134 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
நாமக்கல், டிச.11:நாமக்கல் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 37,134 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மாதம் ரூ.1000 வீதம் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் வகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அப்போது ஏற்கனவே இருந்த பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, ஏராளமான மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் அளித்தனர். இவர்களுக்கு நாளை முதல் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (12ம் தேதி) சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை 2ம் கட்டமாக தொடங்கி வைக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில், நாளை 2ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்குகிறது.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 37,134 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. 2ம் கட்ட தொடக்க விழா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நாளை காலை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத்துறை அலுவலர்கள், நல்லமுறையில் செய்ய வேண்டும்,’ என்றார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி, லெனின், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2ம் கட்ட தொடக்க விழாவில், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, கலெக்டர் துர்காமூர்த்தி, மாதேஸ்வரன் எம்பி, பிரகாஷ் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
நாமக்கல், டிச.11:நாமக்கல் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 37,134 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மாதம் ரூ.1000 வீதம் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் வகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அப்போது ஏற்கனவே இருந்த பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, ஏராளமான மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் அளித்தனர். இவர்களுக்கு நாளை முதல் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (12ம் தேதி) சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை 2ம் கட்டமாக தொடங்கி வைக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில், நாளை 2ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்குகிறது. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 37,134 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. 2ம் கட்ட தொடக்க விழா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நாளை காலை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத்துறை அலுவலர்கள், நல்லமுறையில் செய்ய வேண்டும்,’ என்றார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி, லெனின், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2ம் கட்ட தொடக்க விழாவில், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, கலெக்டர் துர்காமூர்த்தி, மாதேஸ்வரன் எம்பி, பிரகாஷ் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.