விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
நாமக்கல், செப்.11:நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தமிழக அரசின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சவுக்கு, தேக்கு, மகாகனி ஆகிய மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படுவோர், மாவட்டத்தில் உள்ள 15 வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி சிட்டா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகிய ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement