ரூ.5.58 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மல்லசமுத்திரம், அக். 10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், வாரம் தோறும் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடப்பது வழக்கம்.
Advertisement
நேற்று நடந்த ஏலத்தில் 265 மூட்டை பருத்தியை விவசாயிகள் கருமனூர், ஆத்துமேடு, பாலமேடு, மங்களம் பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலம் எடுக்க சேலம், கோவை, ஈரோடு, அவினாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் 60 கிலோ எடை கொண்ட சுரபி ரகம் குவிண்டால் ரூ.6550 முதல் ரூ.8003 வரையிலும், பி.டி.ரகம் ரூ.6109 முதல் ரூ.7842 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.2555 முதல் ரூ.5005 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.5.58லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
Advertisement