திருச்செங்கோட்டில் ரூ.1 லட்சத்திற்கு எள் விற்பனை
திருச்செங்கோடு, செப்.10: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 15 மூட்டை எள் ரூ.1.08 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ 121.70 வரையிலும், சிவப்பு எள் ரூ.106.20 முதல் ரூ.117.60 வரையிலும், வெள்ளை எள் ரூ.108.80 வரையிலும் விற்பனையானது. தலைவாசல், ஆத்தூர், குமாரபாளையம் பகுதியிலிருந்து அதிகளவில் எள் வரத்து இருந்தது. 11 மூட்டை நிலக்கடலை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. 2 மூட்டை ஆமணக்கு ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது.
Advertisement
Advertisement