முதுகலைப் படிப்பு சேர்க்கை அறிமுக விழா
நாமக்கல், அக்.9: நாமக்கல் அறிவு திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம், உலக சமுதாய சேவா சங்கம் இணைந்து, யோகமும் மனித மாண்பும், முதுகலைப் படிப்பு சேர்க்கை அறிமுக விழா மற்றும் கர்நாடகா ஜெயின் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களுக்கு டிப்ளமோ பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் உழவன் தங்கவேலு தலைமை வகித்தார். நாமக்கல் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவரும், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அலுவலர்கள் சங்க தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சம்பத், 93 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.