பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
நாமக்கல், ஆக.9: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா ஆபீஸ்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், இன்று 9ம்தேதி காலை 10 மணிமுதல் 1 மணிவரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், இந்த குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.