கலைத்திருவிழா கொண்டாட்டம்
ராசிபுரம், அக்.8: தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் கடந்த 16ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு, கல்லுாரியின் முதல்வர் யூசுப் கான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 32 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவ- மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விழாவில் கல்லுாரியின் முதல்வர் பேசுகையில், ‘கல்லூரி மாணவ- மாணவிகளின் தனித்திறன்களையும், கலைத்திறன்களையும் உலகறிய செய்யும் வகையில், தமிழக அரசும், உயர் கல்வித்துறையும் மாணவர்களுக்கு மாபெரும் வாய்ப்பை கலைத்திருவிழா மூலம் கொடுத்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்கள் அறியப்படுகின்றன,’ என்றார்.