நாமக்கல்லில் திமுகவினர் அமைதி ஊர்வலம்
நாமக்கல், ஆக.8: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி தலைமையில், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, பரமத்தி ரோட்டில் உள்ள கலைஞர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர், அங்கு கலைஞர் படத்திற்கு, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், நாமக்கல் மாநகர செயலாளர்கள் ராணா ஆனந்த், துணை மேயர் பூபதி, சிவக்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.