முனியப்பன் கோயில்களில் திருவிழா
திருச்செங்கோடு, ஆக. 8: திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் முனியப்பன் கோயில்களில் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு நகர பகுதிகளான சட்டையம்புதூர், ராஜா கவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சீதாராம் பாளையம், திருநகர் காலனி வெள்ளிப்பாளிமுனியப்பன் சாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முனியப்பன் கோயில்களில் நேற்று திருவிழா நடந்தது. விழாவில், பொதுமக்கள் தங்களது உடலில் ஏற்பட்டுள்ள நோய் பிரச்னைகள் குணமாக மண் பொம்மைகள், மண் உருவங்கள் செய்து கோயிலை சுற்றி வந்து, கோயில் வளாகத்தில் வைத்து வழிபட்டனர். கோயில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டனர். பக்தர்கள் விரதமிருந்து வேல் சாற்றுதல் செய்தனர். முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களும் செலுத்தப்பட்டது. சிறப்பு பூஜையில் முனியப்பசாமிக்கு பல்வேறு வகையான அபிசேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.