பாரில் மது பதுக்கி விற்ற 2 பேர் கைது
நாமக்கல், அக்.7: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி டாஸ்மாக் கடை பகுதியில் கிருஷ்ணன்(46) என்பவர் பார் நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, அனுமதியின்றி அதிக விலைக்கு பாரில் விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மதுவிலக்குபிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் நேற்று அந்த பாரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 47 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் கிருஷ்ணன், ஊழியர் மணிகண்டன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement