பாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்
நாமக்கல், அக்.7: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு எச்எம்எஸ்., கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமான, அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தரமான முதலாளியோ அல்லது நிரந்தரமான மாத ஊதியமோ இல்லை. இவர்களின் உழைப்பு கேற்ற ஊதியம் கொடுக்கப்படாத காரணத்தால், வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறதிசெய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாண்டிச்சேரி மற்றும் டில்லி மாநிலங்களில் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. அதைப்போல தமிழகத்தில் உள்ள கட்டுமான, அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.