கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ரூ.2.47 லட்சம் காணிக்கை
பள்ளிபாளையம், ஆக.7: கண்ணனூர் மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ.2.47 லட்சம் அரசு கரூவூலத்தில் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டது. பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழா நிறைவடைந்த நிலையில் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் வடிவுக்கரசி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் 24,589 ரூபாயும், நிரந்தர உண்டியலில் 2,22,402 ரூபாயும் இருந்தது. இந்த தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் உள்ள கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டது.