அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு
குமாரபாளையம், ஆக.6: தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்ற செம்மொழியாம் தமிழ்மொழி போட்டியில் அறநெறிக்கதைகளை சொல்லிய அரசு பள்ளி மாணவி சந்தோஷிக்கு, அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் செம்மொழியாம் தமிழ்மொழி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி சந்தோஷி பங்கேற்று, மக்களின் மனதை நெறிப்படுத்தும் வகையிலான அறநெறிக்கதைகளை சொல்லி வெற்றி பெற்றார். தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் சென்னையில் நடைபெற்ற விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், மாணவியை பாராட்டி பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.