ரூ.8.37 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை
திருச்செங்கோடு, ஆக.6: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் எள் ஏலம் நடந்தது. 32 மூட்டை ரூ.2.93 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ.150.30 முதல் ரூ.150.40 வரையிலும், சிவப்பு எள் ரூ 67.70 முதல் ரூ.88.80 வரையிலும், வெள்ளை எள் ரூ.79 முதல் ரூ.130.60 வரையிலும் விற்பனையானது. சினனசேலம் பகுதியிலிருந்து எள் அதிகளவில் வரத்து இருந்தது. இதேபோல், 200 மூட்டை பருத்தி ரூ5.44 லட்சத்திற்கு விற்பனையானது. பிடி ரகம் குவிண்டால் ரூ.6010 முதல் ரூ.8020 வரை விற்பனையானது. சுரபி ரூ.9100 முதல் ரூ.10358 வரை விற்பனையானது. பருத்தி பட்லூர், செல்லிபாளையம், உஞ்சனை, குமாரபாளையம், காடச்சநல்லூர், ஏமப்பள்ளி, மோளியபள்ளி, மொடக்குறிச்சி, சங்ககிரி, பரமத்திவேலூர், இறையமங்கலம் பகுதிகளில் இருந்து வந்தது.