அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்
நாமக்கல், டிச. 5: நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறத்தி கோஷமிட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர், பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.