நாமக்கல் எம்பி நன்றி தெரிவிப்பு
ராசிபுரம், ஜூலை 10: ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில், நாமக்கல் எம்பி மாதேஷ்வரன், பேரூராட்சி தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில், பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கொங்கு ஒன்றிய செயலாளர் சின்னதம்பி, துணை செயலாளர் தியாகராஜன், மீனாட்சி, வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், சீனிவாசன், ஜனார்த்தனன், தனசேகரன், பானுமதி, ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement