ரூ.63 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்
மல்லசமுத்திரம், நவ.15: மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.63,717.10க்கு கொப்பரை விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் பள்ளக்குழி, காளிப்பட்டி, செண்பகமாதேவி, சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 11 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ‘
Advertisement
முதல் தரம் கிலோ ரூ.161 முதல் 215.10 வரையிலும், 2ம் தரம் ரூ.101 முதல் 150.50 வரையிலும் என மொத்தம் ரூ.63 ஆயிரத்து 717.10க்கு விற்பனையானது. ஏலத்தில் காங்கேயம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த ஏலம் வரும் 21ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Advertisement