1.95 லட்சம் வாக்காளர்களை நீக்க முடிவு?
Advertisement
கணக்கெடுப்பு படிவங்கள் 100 சதவீதம் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், சுமார் 1.95 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான பட்டியல், அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி ஏஜென்டுகளின் வாட்ஸ்அப் குரூப்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பதவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை வைத்து முகவரி மாறி சென்றவர்கள் குறித்த தகவல் தெரிந்தால், அவர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரும் 11ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்ப்பட்டுள்ளது. அதற்கு பின்னர், அவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது நீக்கம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement