பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
Advertisement
பள்ளிபாளையம், டிச. 8: பள்ளிபாளையம் காவிரி ரயில் நிலையம் அருகே, பெட்டி கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனையிட்டார். இதில் பெட்டி கடையில் பதுக்கி வைத்திருந்த 13 ஆப் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் காந்தி நகரைச் சேர்ந்த சுரேஷ்(42) என்பவரை கைது
செய்தனர்.
Advertisement