மாநில இறகுபந்து போட்டி கோணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு வெண்கல பதக்கம்
Advertisement
நாகர்கோவில், அக். 9: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மாநில அளவிலான இறகு பந்து போட்டி கோவையில் நடந்தது.
இந்த போட்டியில் நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் ஆல்பிரட் சேவியர், துணை முதல்வர் ஜெரால்டின் அகிலா, உடற்கல்வி இயக்குநர் முனைவர் சுப்ரதீபன்
மற்றும் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினர்.
Advertisement