தரங்கம்பாடி அருகே புதிய நியாயவிலை கடை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தரங்கம்பாடி, அக்.31: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ரூ.13 லட்சம் செலவில் புதிய நியாயவிலை கடை எம்எல்ஏ திறந்து வைத்தார். தரங்கம்பாடி அருகே உள்ள மாணிக்கபங்கு ஊராட்சியை சேர்ந்த பெருமாள்பேட்டை கிராமத்தில் ரூபாய் 13 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அனிதா அனைவரையும் வரவேற்றார்.
                 Advertisement 
                
 
            
        பூம்புகார் தொகுதி எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் புதிய நியாயவிலை கடையை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ முகம்மது சித்திக், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக், மாவட்ட பிரதிநிதி மணிமாறன், ஊரக வளர்ச்சி அதிகரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
                 Advertisement 
                
 
            
        